யாழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வேறு ஒருவரின் விசாவைப் பயன்படுத்தி கனடாவிற்கு தப்பிச் செல்ல வந்த நபரை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் தனது, விமான அனுமதியை முடித்துவிட்டு குடிவரவு கருமப்பீடத்திற்கு சென்று தனது கடவுச்சீட்டை ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட கடவுச்சீட்டில் உள்ள புகைப்படமும் அவரது புகைப்படமும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருப்பதால், இந்தக் கடவுச்சீட்டைப் பற்றிய கூடுதல் தகவல்களைக் கண்டறிய குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் அதன் தகவல்கள் உள்ளிடப்பட்டுள்ளன.

இதன்படி, இந்த கடவுச்சீட்டை வைத்திருப்பவருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து திருகோணமலை நீதிமன்றம், விமானப் பயணத் தடை விதித்துள்ளதாக உண்மைகள் வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Follow on social media
CALL NOW

Leave a Reply