Skip to content
Ra Tamil
Menu
  • Checkout
  • Latest Tamil News
  • Login/Register
  • My account
Menu

நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு

Posted on March 21, 2025March 21, 2025 by Ajay

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய, 2025 பெப்ரவரி மாதத்தில் நாட்டின் முதன்மை பணவீக்கம் -3.9% ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025 ஜனவரி மாதத்தில், இது -4.0% ஆக பதிவாகியிருந்தது….

திருத்தம் செய்யப்பட்ட பேறுபேறுகள் – கல்வியமைச்சின் விசேட அறிவிப்பு

Posted on March 19, 2025March 19, 2025 by Ajay

2024ம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் மீளத் திருத்தம் செய்யப்பட்ட பேறுபேறுகள் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த திருத்தம் செய்யப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கு தற்போது சந்தர்ப்பமளிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலைகளின் அதிபர்களுக்கு…

காதல் தோல்விக்கு பின் தமன்னா வெளியிட்ட அதிரடி பதிவு

Posted on March 19, 2025March 19, 2025 by Ajay

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்தார் தமன்னா. அந்த வகையில், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு…

உலகை உலுக்கிய மற்றுமொரு விமான விபத்து – 12 பேர் பலி

Posted on March 19, 2025March 19, 2025 by Ajay

மத்திய அமெரிக்காவின் ஹோண்டுராஸில் விமான விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமான விபத்தில் ஐந்து பேர் உயிர் தப்பியதாகவும், ஒருவர் இன்னும் காணவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமான விபத்தில் பிரபல இசைக்கலைஞர் உட்பட 12…

போலி முகநூல்கள் | அர்ச்சுனா தலைமையிலான சுயற்சைக்குழு

Posted on March 19, 2025March 19, 2025 by Ajay

தமிழ் அரசியல் பரப்புக்கு தற்போது சவால் விடும் விடயமாக போலி முகநூல் பக்கங்களின் நடவடிக்கை மாறியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. உள்ளுராட்சி தேர்தல் நடைபெறும் காலம் நெருங்கி வருகின்ற இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் கட்சிகள் மீதான மக்களின் எதிர்பார்ப்பை சிதைத்துவிடும் எனவும் அரசியல் பரப்புக்களில்…

அர்ச்சுனாவுக்கு போடப்பட்ட தடை – சபாநாயகர் அதிரடி

Posted on March 19, 2025March 19, 2025 by Ajay

இலங்கை நாடாளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை ஒன்றை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எம்.பி இராமநாதன் அர்ச்சுனாவின் செயற்பாடுகள் மற்றும் வார்த்தைகள் தேசிய நல்லிணக்கத்துக்கும்,…

யாழில் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திவிட்டு தப்பி ஓட்டம்

Posted on March 19, 2025March 19, 2025 by Ajay

யாழ். தெல்லிப்பழையில் கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது சந்தேகநபர் ஒருவர் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் நேற்றையதினம் (18) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சந்தேக நபரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. அதன்படி தெல்லிப்பழை பொலிஸார்…

Youtuber கிருஷ்ணா மீண்டும் சிறையில் அடைப்பு – நீதிமன்றம் உத்தரவு

Posted on March 19, 2025March 19, 2025 by Ajay

யாழ்ப்பாண Youtuber கிருஷ்ணாவை எதிர்வரும் ஏப்ரல் 02ம் திகதி வரை மீண்டும் சிறையில் அடைக்க மல்லாகம் நீதிமன்றம் இன்றைய தினம் (19) உத்தரவு பிறப்பித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளை நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்டதுடன் பெண்ணொருவரை…

பொலிஸ் மா அதிபர் தென்னகோனுக்கு விளக்கமறியல்

Posted on March 19, 2025March 19, 2025 by Ajay

கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நாளை (20) வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை பிரதான நீதவான் அருண இந்திக புத்ததாச, இன்று (19) உத்தரவிட்டார். மேலும், பிணை வழங்குவது குறித்து நாளை பரிசீலிப்பதாக நீதவான் தெரிவித்தார். திறந்த பிடியாணை…

செவந்தி தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு – காட்டுக்குள் குழந்தையுடன் கைது

Posted on February 26, 2025February 26, 2025 by Ajay

திட்டமிட்ட குற்றத் தலைவர் கணேமுல்லே சஞ்சீவவின் கொலைக்குப் பின்னணியில் உள்ளதாகக் கருதப்படும் இஷார செவ்வந்தி, நாட்டின் அனைத்து பாதுகாப்புப் படையினராலும் தேடப்பட்டு வருகிறார். செவந்தி, தெபுவனவில் உள்ள ரன்னகல தோட்டத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமான வீட்டில் பதுங்கியிருப்பதாக தெபுவன பொலிஸ் தெரிவித்துள்ளது. கிடைத்த…

மீண்டும் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

Posted on February 21, 2025February 21, 2025 by Ajay

ஜா-எல அருகே மோர்கன்வத்த கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (20) இரவு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றவாளி கடவத்தை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸாரால் தெரிவிக்கப்படுகிறது. கொலைக்கான காரணம்…

யாழில் வைப்பிலிடப்பட்ட பணம் மாயம் – வங்கி முகாமையாளர் விளக்கமறியலில்

Posted on February 21, 2025February 21, 2025 by Ajay

யாழ்ப்பாணத்தில், வெளிநாட்டில் வசிப்பவரின் நிலையான வைப்பு பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வங்கி முகாமையாளர், நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் ஒருவர், நீண்ட காலத்திற்கு நிலையான வைப்பில் பெருந்தொகை பணத்தினை வைப்பிலிட்ட…

வடமராட்சி கிழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது தாக்குதல்

Posted on February 21, 2025February 21, 2025 by Ajay

குடும்பத்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் வடமராட்சி கிழக்கு , வத்திராயன் பகுதியில் வசிக்கும் , தந்தை , மகன் மற்றும் மகனின் மகன் ஆகியோர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில்…

வாகன இறக்குமதியில் சிக்கல்

Posted on February 16, 2025February 16, 2025 by Ajay

வாகனங்களை இறக்குமதி செய்யும் போது ஜப்பானின் முன்னணி வங்கிகள் எதுவும் இலங்கையின் கடன் கடிதங்களை ஏற்றுக்கொள்வதில்லை என இலங்கை இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் அவசரமாகத் தீர்வுகளை வழங்க வேண்டும் என்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சங்கத்தின்…

3 மாதங்களில் பணவீக்கம் அதிகரிக்கும் – மத்திய வங்கி

Posted on February 16, 2025February 16, 2025 by Ajay

திறமையான தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் பின்னடைவு ஏற்படும் என இலங்கை மத்திய வங்கி எதிர்வு கூறியுள்ளது. 2025 ஆம் ஆண்டிற்கான அதன் முதல் நாணயக் கொள்கை அறிக்கையை வெளியிட்டு மத்திய வங்கி இதனைக்…

இலங்கைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்த இந்தியா

Posted on February 2, 2025February 2, 2025 by Ajay

இந்தியாவின் வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்காக 300 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தால் நேற்றைய தினம் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் என்ற வகையில் நிர்மலா சீதாராமன் இந்த…

Posts pagination

1 2 … 512 Next
©2025 Ra Tamil | Design: Newspaperly WordPress Theme