பெய்ரூட் பதுங்கு குழியிலிருந்த 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான பணம், தங்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இருதரப்புக்கும் இடையே தாக்குதல்கள் தொடர்ந்துவரும் நிலையில், பெய்ரூட்டில் மிகப்பெரிய பதுங்கு குழியை இஸ்ரேல் இராணுவம் கண்டுபிடித்துள்ளது.
குறித்த பதுங்கு குழி ஹசன் நஸ்ரல்லாவின் இரகசிய பதுங்கு குழி என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பதுங்கு குழியிலிருந்து பெருமளவிலான தங்கம், பணம் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதன் மதிப்பு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
Follow on social media