- மேஷம்மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள் . வழக்கு சாதகமாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.
- ரிஷபம்ரிஷபம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.
- மிதுனம்மிதுனம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.
- கடகம்கடகம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் ஏற்படும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.
- சிம்மம்சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தோற்றப் பொலிவு கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
- கன்னிகன்னி: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்து கொள்ள வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
- துலாம்துலாம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
- விருச்சிகம்விருச்சிகம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும் . விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சாதிக்கும் நாள்.
- தனுசுதனுசு: சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். நன்மை நடக்கும் நாள்.
- மகரம்மகரம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் விலகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் உதவி கிடைக்கும். மாற்றம் ஏற்படும் நாள்.
- கும்பம்கும்பம்: சந்திராஷ்டமம் இருப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்கு உள்ளாவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி இருக்கும். கவனம் தேவைப்படும் நாள்.
- மீனம்மீனம்: கடினமான வேலைகளையும் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.