இன்றைய ராசிபலன்

  • மேஷம்மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சகோதரர்களால் பயனடைவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.  தைரியம் கூடும் நாள்.
  • ரிஷபம்ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக  குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் விலகும். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து  பணம் வரும். நட்பு வட்டம் விரியும்.வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.  உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
  • மிதுனம்மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

  • கடகம்கடகம்: எதிலும் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்வீர்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம்.  உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். கவனம் தேவைப்படும் நாள்.
  • சிம்மம்சிம்மம்: அதிரடியான சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். இனிமையான நாள்.
  • கன்னிகன்னி: தன்னம்பிக்கையுடன் பொது  காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். தைரியம் கூடும் நாள்.
  • துலாம்துலாம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். நீண்ட நாளாக தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களின் ஆதரவு பெறுவீர்கள். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. உற்சாகமான நாள்.
  • விருச்சிகம்விருச்சிகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒருவரை ஒருவர் மாற்றி குறை கூறி கொண்டிருக்க வேண்டாம். உடல்நலம் பாதிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அளவாக பழகுங்கள். பொறுமை தேவைப்படும் நாள்.
  • தனுசுதனுசு: உங்களின் அறிவாற்றலைவெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடிவரும். எதிர்பாராத நன்மை உண்டாகும் நாள்.
  • மகரம்மகரம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர்கள் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
  • கும்பம்கும்பம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.
  • மீனம்மீனம்: எதிர்ப்புகள் அடங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். தாயாருடன் வீண்விவாதம் வந்து போகும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.  தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply