ஷாருக்கான் உயிருக்கு அச்சுறுத்தல் – உளவுத்துறை எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

ஷாருக்கான் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. மிரட்டலை தொடர்ந்து ஷாருக்கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஷாருக்கானுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக சமீபத்தில் திரைக்கு வந்த ஜவான் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. அடுத்து டங்கி என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் ஷாருக்கான் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. இது திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மிரட்டலை தொடர்ந்து ஷாருக்கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் முழு நேரமும் ஷாருக்கானுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்புக்காக செல்லும் போலீசாரிடம் எம்பி 5 எந்திர துப்பாக்கிகள். ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கிளோக் பிஸ்டல்கள் இருக்கும். ஷாருக்கான் வெளியில் எங்கு சென்றாலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் உடன் செல்வார்கள்.

இது தவிர ஷாருக்கான் வீட்டிலும் துப்பாக்கிய ஏந்திய 4 போலீஸ் கமாண்டோக்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர். இந்த தகவலை வி.ஐ.பி. பாதுகாப்புக்கான சிறப்பு ஐ.ஜி. திலீப் சாவந்த் தெரிவித்துள்ளார்

Follow on social media
CALL NOW Premium Web Hosting