கொக்குத்தொடுவாய் தெற்குப் பகுதியில் யானை துரத்தியதில் கண்ணிவெடி அகற்றும் மூன்று பெண் பணியாளர்கள் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய்த் தெற்கு கிராமேசேவகர் பிரிவிற்குட்பட்ட வேம்படி சந்தியில் இருந்து வெலிஓயா செல்லும் பாதை பகுதியில் காட்டுப்பகுதிக்குள் கண்ணிவெடிப் பிரிவை சேர்ந்த 10 பேர் கொண்ட குழு நேற்று (20) வேலை செய்து கொண்டு இருந்துள்ளது.
அந்தப் பகுதியில் திடீரென யானை ஒன்று வந்து அவர்களைத் துரத்தியுள்ளது. யானைக் கண்டவுடன் பயத்தில் பணியாளர்கள் ஓடியுள்ளனர். அதன் போது 3 பெண் பணியாளர்கள் காயமடைந்துள்ளார்கள்.
காயமடைந்த மூவரும் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Follow on social media