திரிஷாவுக்கு இது முதல் முறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் திரிஷா முதல் முறையாக இதனை தேர்வு செய்துள்ளார். இது அவருடைய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

சாமி, கில்லி, பீமா, சர்வம் போன்ற பல படங்களில் நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்து வந்தார். இவவர் திரைத்துறைக்கு வந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் நாயகியாக நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இவர் சமீபத்தில் தெலுங்கு மொழியில் பிருந்தா என்ற இணையத் தொடரில் நடிக்க சம்மதித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. காவல்துறை அதிகாரியாக முதன் முதலில் நடிக்கும் நடிகை திரிஷா சீருடையுடன் படப்பிடிப்பு தளத்தில் நாய்களைக் கொஞ்சும் புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. இதனை அவருடைய ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply