ஜென்டில்மேன்-2 படத்தின் கதாநாயகியை அறிவித்த படக்குழுவால் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
1993-ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் ’ஜென்டில்மேன்’. இப்படத்தில் அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில், மனோரம்மா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தி இருந்தார். அதன்படி ஜென்டில்மேன்-2 படத்தை அடுத்ததாக தயாரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கும் ஜென்டில்மேன்-2 படத்திற்கு கீரவாணி இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் நடிக்கவுள்ள கதாநாயகி குறித்து சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வந்தது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா இதில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில் ஜென்டில்மேன்-2 படத்தில் நடிக்க நயன்தாரா சக்கரவர்த்தி ஒப்பந்தமாகிவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது படக்குழு. இவர் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.
தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் நயன்தாரா சக்கரவர்த்தி குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow on social media