மாணவியின் அந்தரங்க வீடியோக்களை இணையத்தில் பதிவிட்ட காதலன்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

பிரபல ஆபாச வலைத்தளத்தில் இலங்கை பல்கலைகழக மாணவியொருவரின் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியானமை தொடர்பில் விசாரணை நடத்திய பொலிசார், பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர். பல்கலைகழக மாணவியின் காதலனே அந்த புகைப்படங்களை ஆபாச தளத்திற்கு அனுப்பிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மாத்தறை பிரதேசத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.

மாத்தறை பிரதேச குழந்தைகள் மற்றம் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரியாக கடந்த 17ஆம் திகதி வருணி கேசல பொறுப்பேற்றுக் கொண்டார். கடமைகளை பொறுப்பேற்றதும், நிலுவையிலுள்ள வழக்கு விடயங்களை ஆராய்ந்துள்ளார். அப்போது நவம்பர் 30ஆம் திகதி செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்று அவரது கவனத்தை ஈர்த்தது.

ஆபாச வலைத்தளத்தில் தனது புகைப்படங்கள், வீடியோ வெளியானதாக யுவதியொருவர் முறைப்பாடு செய்திருந்தார். அவர் பல்கலைகழக மாணவி.

இந்த விவகாரம் மேலதிக விசாரணைக்காக சிஐடிக்கு அனுப்பப்பட்டிருப்பதும் அவருக்கு தெரியவந்தது.

மறுநாள், முறைப்பாட்டாளரான மாத்தறையில் வசிக்கும் 22 வயதான பல்கலைகழக மாணவியை தனது அலுவலகத்திற்கு அழைத்த வருணி, சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தினார்.

முதல் விசாரணையில் போதுமான தகவல்கள் கிடைக்காததால், கடந்த டிசம்பர் 19ஆம் திகதி பல்கலைகழக மாணவியை மீளவும் மாத்தறை பிரதேச குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினார்.

ஆபாச இணையத்தளத்தில் உள்ள வீடியோ காட்சிகளின் போது அணிந்திருந்த ஆடைகள், இடம் என்பவற்றின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் வருணி சில தகவல்களை பெற்றார்.

பின்னர் சம்பந்தப்பட்ட தகவல்களை சிறப்பு கணினி தகவல் பிரிவுக்கு வழங்கி தொழில்நுட்ப அறிக்கையைப் பெற்றார்.

பல்கலைக்கழக மாணவியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியான ஆபாச இணையதளத்தில் கடந்த ஒக்ரோபரில் அதிகளவான புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. தொலைபேசி இலக்கங்களும் குறிக்கப்பட்டன. பின்னர் பல நீக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்க 2016ஆம் ஆண்டு முதல் நடந்து வருவது தொழில்நுட்ப அறிக்கையில் தெரிய வந்தது.

இவ்வளவு தகவல்களை வெளிப்படுத்திய பின்னர், இந்த குற்றத்தை யார் செய்தார்கள் என்று வருணிக்கு சில சந்தேகங்கள் இருந்தன. பல்கலைக்கழக மாணவியின் காதலன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வருணிக்கு சந்தேகம் எழுந்தது. மாணவியின் காதலன் கணினி மென்பொருள் பொறியியலாளர் என்றதும் வருணியின் சந்தேகம் மேலும் அதிகரித்தது. இருவரின் திருணமணத்தை காதலனின் அண்ணி விரும்பவில்லை. அவர் கணினி கணினி அறிவியலில் நிபுணரும் பல்கலைக்கழக பட்டதாரியுமாவார்.

அவர் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். அவர் வழங்கிய தகவல்களின்படி, மாணவியின் காதலன் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

விசாரணையில், காதலியின் புகைப்படங்களை ஆபாச இணையத்தளங்களிற்கு அனுப்பியதை அவர் ஏற்றுக்கொண்டார். மாணவியும் விசாரணையிடத்திற்கு அழைக்கப்பட்டார். தனது காதலனே இந்த பாதக செயலை செய்தது தெரிந்ததும் அவர் கதறி அழுதார்.

மாணவி தனது அறையில் இருந்தபோது, சந்தேகநபர் வீடியோ அழைப்பை மேற்கொண்டிருந்தார். இதன்போது, மாணவியின் அந்தரங்க காட்சிகளை பதிவு செய்துள்ளார்.

காதலன் கைது செய்யப்பட்டு, மாத்தறை மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply