கொழும்பில் இளம் பெண் கைது – விசாரணையில் அதிர்ச்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நுகேகொடையில் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான “கெகுலி” என்ற பெண் ஒருவர் ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொடை ஊழல் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் நுகேகொடை, தெல்கந்த பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் மாதிவெல பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது நடவடிக்கையின் போது பெண்ணிடமிருந்து 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 11,000 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.


சந்தேக நபர் இரத்மலானை, தெஹிவளை, நுகேகொடை, தெல்கந்த மற்றும் மிரிஹான ஆகிய பிரதேசங்களில் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Follow on social media
CALL NOWPremium Web Hosting