379 பயணிகளுடன் வந்த விமானம் ஓடுதளத்தில் எரிந்து நாசம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் இன்று (02) டோக்கியோவில் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரையிறங்கும்போது மற்றொரு விமானத்துடன் மோதி தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது

விமானம் தீப்பிடித்து எரியும் காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அதில், விமானத்தின் ஜன்னல்கள் மற்றும் அதன் கீழே தீப்பிடித்து எரிவதை காண முடிந்தது.

அதேவேளை விமானத்தின் ஓடுதளத்திலும் தீ பரவியது.

அந்த விமானம் தரையிறங்கும்போது, கடலோர காவல்படையின் விமானம் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் துணையுடன் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்து ஏற்பட்டபோது உள்ளே இருந்த 367 பயணிகள் மற்றும் பணியாளர்கள் உள்பட 379 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக, ஜப்பானிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting