சூர்யாவிற்கு பாடல் எழுதிய சிவகார்த்திகேயன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

ஜெய்பீம் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் சூர்யாவின் அடுத்த படமான எதற்கும் துணிந்தவன் படத்தின் அடுத்த பாடல் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, வினய் ராய், பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் போன்ற பலர் நடித்து வெளிவரவிருக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் இருந்து வரிசையாக பாடல்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதற்கு முன் விக்னேஷ் சிவன், யுகபாரதி இவர்கள் எழுதிய பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சும்மா சுர்ருனு என்ற பாடலை வெளியிட்டிருக்கிறது அந்த படக்குழு. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார்.

இவர் இதற்கு முன்பு கோலமாவு கோகிலா படத்தில் எனக்கு இப்போ கல்யாண வயசு, நம்ம வீட்டு பிள்ளை படத்தில் காந்த கண்ணழகி போன்ற பல பாடல்களை எழுத்தியிருக்கிறார். தற்போது இந்த பாடல் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

பிப்ரவரி 4-ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளிவரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOW

Leave a Reply