காலி – அஹூங்கல – கல்வெஹர பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் பிள்ளை காயமடைந்துள்ளனர்.
அஹூங்கல பாடசாலைக்கு அருகில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உந்துருளியில் பயணித்த மூன்று பேரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மூவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow on social media