பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை – 3 பேர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

குருணாகல் – கும்புகெடே பகுதியில் பேருந்து ஒன்றில் பாடசாலை மாணவி ஒருவரிடம் பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தரம் 11 ஒன்றில் கல்வி கற்கும் குறித்த மாணவி, பாடசாலை விட்டு வீட்டுக்குச் செல்லும் போது கும்புகெடே பகுதியில் வைத்து பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில், பேருந்தின் சாரதி, நடத்துனர், மற்றும் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

மாணவி குருணாகல் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow on social media
CALL NOW

Leave a Reply