இன்றும் நாளையும் நடைப்பெறும் O/L பரீட்சை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விசேட நடைமுறைப் பரீட்சை இன்றும் (29) நாளையும் (30) நடைபெறவுள்ளது.

அந்த வருடத்திற்கான நடைமுறைப் பரீட்சைகள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை இடம்பெற்றதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் கொவிட் தொற்று காரணமாக நடைமுறைப் பரீட்சைகளில் பங்கேற்க முடியாத பரீட்சார்த்திகளுக்கு விசேட நடைமுறைப் பரீட்சை ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் பல நிலையங்களில் நடைமுறைப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பரீட்சைக்குத் தோற்ற விரும்பும் பரீட்சார்த்திகள் வலயக் கல்வி அலுவலகத்தின் அழகியல் துறைக்கு பொறுப்பான கல்வி பணிப்பாளருக்கு அறிவித்து குறித்த நடைமுறைப் பரீட்சைக்கு தோற்ற முடியும் என அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply