போர் நிறுத்தத்திற்கு இடமில்லை – இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு, 4000 ஐ கடந்த பலி எண்ணிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

காசா முனையின் தெற்கு எல்லையில் எகிப்து அமைந்துள்ளது. காசாவில் இருந்து எகிப்து செல்ல ரபா நகரில் உள்ள எல்லைப்பகுதியே ஒரே வழியாகும். இதனிடையே, ஹமாஸ் அமைப்பிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் காசாவுடனான எல்லையை எகிப்து மூடியுள்ளது.

இதனிடையே, காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்த உள்ளதாக தகவல் வெளியானது. மேலும், காசாவில் இருந்து வெளிநாட்டினர் வெளியேறவும் அதற்கு ஈடாக மனிதாபிமான நிவாரண உதவிகளை காசாவுக்குள் கொண்டு செல்லவும் ரபா எல்லையை எகிப்து திறக்க இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ஹமாசுக்கு எதிரான போரில் இதுவரை சண்டை நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், வெளிநாட்டினர் காசாவை விட்டு வெளியேறுவதற்கு ஈடாக மனிதாபிமான நிவாரண உதவிகள் காசாவுக்குள் கொண்டு செல்ல அனுமதி வழங்கவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 2 ஆயிரத்து 670 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 114 ஆக அதிகரித்துள்ளது.

Follow on social media
CALL NOW

Leave a Reply