பாடசாலை மாணவிகள் மத்தியில் போதை மாத்திரை பாவனை அதிகரிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

அநுராதபுரம் மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள மாணவிகளிடம் போதை மாத்திரைகள் பாவனை அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இராணுவ விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளுடன் அநுராதபுரத்தில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தகைய போதை மாத்திரைகளை பெற்றுக் கொள்ள தேவையான பணத்திற்காக சில மாணவிகள் பாலியல் ரீதியான தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை ஆசிரியர் சங்கம் அநுராதபுரத்தில் நடத்திய விசேட நிகழ்வொன்றிலேயே அநுராதபுரம் போன்றே களுத்துறை மாவட்டத்திலும் மாணவிகளிடம் போதை மாத்திரைகள் பாவனை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Follow on social media
CALL NOW

Leave a Reply