பாரதி கண்ணம்மா ரோஷ்ணி ஹரிப்ரியன் மீண்டும் விஜய் டிவியில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா ரோலில் நடித்து மிக பெரிய அளவில் பாப்புலரானவர் ரோஷ்ணி ஹரிப்ரியன். அவர் சில மாதங்களுக்கு முன்பு திடீரென சீரியலில் இருந்து விலகிவிட்டார். அவர் இனி சினிமாவில் மட்டும் கவனம் செலுத்த போகிறார் என சொல்லப்பட்டது.

ஏற்கனவே அவர் சார்பட்டா பரம்பரை, ஜெய்பீம் உள்ளிட்ட பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பாரதி கண்ணம்மா சீரியலால் தவறவிட்டுவிட்டார் என சொல்லப்பட்டது. சீரியலில் இருந்து விலகியதால் இனி அவர் படங்களில் நடிப்பார் என கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் விஜய் டிவிக்கு திருப்புகிறார் என தகவல் பரவி வருகிறது. அவர் குக் வித் கோமாளி மூன்றாம் சீசனில் தான் போட்டியாளராக வர போகிறார் என சொல்லப்படுகிறது.சமீபத்தில் தான் குக் வித் கோமாளி ஷூட்டிங் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

ஊர்வசி, தொகுப்பாளர் அர்ச்சனா, விஜயலக்ஷ்மி உள்ளிட்ட சிலரும் குக் வித் கோமாளியில் போட்டியாளராக வர இருக்கிறார்கள் எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply