இரு குழுக்களுக்கிடையில் மோதல் – ஒருவர் படுகாயம் – வீடு தீக்கிரை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாலைமீன்மடு 50 வீட்டுத் திட்டப் பகுதியில், மது போதையில் இரு குழுக்கழுக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் படுகாயமடைந்ததுடன் வீடு ஒன்று தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியிலுள்ள மீன்பிடியில் ஈடுபட்டுவரும் இருகுழுவினரும் சம்பவதினமான நேற்று சனிக்கிழமை (01) ஒன்றாக மதுபானம் அருந்தியுள்ள நிலையில் ஏற்பட்ட வாய்த்தர்கம் சண்டையாக மாறியதையடுத்து 119 பொலிஸ் அவசர சேவை இலக்கத்துக்கு கிடைத்த தகவலுக்கமைய பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்றதையடுத்து இரு குழுவினரும் சாமாதானமாகினர்.

இதில் காயமடைந்த ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த குழு ஒன்றுடன் தொடர்புபட்ட நாகநாதன் நவநீதனின் குடும்பத்தினர் பயத்தில் அருகிலுள்ள வீட்டில் நேற்று இரவு சென்று தங்கிருந்த நிலையில் குறித்த நபரின் வீட்டை இன்று அதிகாலை இனந்தெரியாத ஒருவர் தீயிட்டுள்ளதையடுத்து வீடு முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற கொக்குவில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply