கால நிலை மாற்றத்தல் 10 முதல் 20 இலட்சம் வரை வருமானம் ஈடிடய அம்பாறை மீனவர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பாரிய மீன்கள் பிடிபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறை – மருதமுனை, சாய்ந்தமருது மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளில் நேற்றுமுன் தினம் (03.12.2022) மற்றும் நேற்றைய தினத்தில் (04.12.2022) அதிகளவிலான மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதிகளில் 3 வகையான பாரிய பாரை மீன்கள், வளையா மீன்கள், சுறா மீன்கள் என கரைவலைகள் மூலம் பிடிக்கப்பட்டு பல இலட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

10 முதல் 20 இலட்சம் வரை வருமானம்
இந்நிலையில் பாரை மீன் ஒன்றின் பெறுமதி சுமார் 1500 ரூபா முதல் 1800 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பிடிக்கப்பட்ட மீன்களினால் ஒரு கடற்தொழிலாளியின் ஒரு நாள் வருமானம் 10 முதல் 20 இலட்சமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மருதமுனை கல்முனை கடற்கரையில் கரை வலை மற்றும் ஆழ்கடல் மீன்பிடி தூண்டில் என்பன தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற நிலையில் கரைவலை கடற்தொழிலாளர்களுக்கு இவ்வாறான பாரிய மீன்கள் தொகுதியாக பிடிபடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Follow on social media
CALL NOW

Leave a Reply