யாழில் பட்டாவும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்து – இளைஞன் படுகாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்ப்பாணம் மானிப்பாய் – காரைநகர் வீதியில் நேற்று மதியம் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியொன்று பட்டாரக வாகனத்துடன் விபத்துக்குள்ளாகி முற்றாக சேதமடைந்தது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மானிப்பாய் – காரைநகர் பிரதான வீதியில் அரைக்கும் ஆலை ஒன்றில் இருந்து பிரதான வீதியில் முச்சக்கர வண்டி பயணிக்க தொடங்கிய நிலையில் பின்புறமாக ஆறுகால்மடம் பகுதியில் இருந்து வருகை தந்த பட்டாரக வாகனம் மோதியது.

முச்சக்கர வண்டியினை செலுத்திய ஆறுகால்மடம் பகுதியினை சேர்ந்த 20 வயதான அஜிந்தன் எனும் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார்.

இதேவேளை பட்டாரக வாகனம் மின்கம்பத்துடன் மோதி பகுதியளவில் சேதமடைந்த நிலையில் வாகன சாரதி காயங்களின்றி மீட்கபட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply