சீனாவில் அனைத்து பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு சுகாதார ஆணைய துணைத் தலைவா் ஸெங் யிக்ஸிங் வியாழக்கிழமை கூறியதாவது:
சீனாவில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளோம். முடிந்தவரை அந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் உடல் தகுதி படைத்த அனைவருக்கும் பல்வேறு கட்டங்களில் தடுப்பூசி செலுத்தி கரோனாவுக்கு எதிரான எதிா்ப்பாற்றல் அணை எழுப்பப்படும் என்றாா் அவா்.
முன்னதாக, சீன அரசுக்குச் சொந்தமான சைனோஃபாா்ம் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்துவதற்காக நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை அதிகாரிகள் வழங்கினா்.
Follow on social media