டுவிட்டர் இந்தியா வெளியிட்டுள்ள தகவல்படி, டுவிட்டரில் நடிகர் விஜய் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷை பற்றி அதிக அளவில் கருத்து பரிமாறப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.
டுவிட்டர் இந்தியா, 2021-ல் டுவிட்டரில் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களில் யாரைப்பற்றி அதிக அளவில் கருத்துகள் பரிமாறப்பட்டது என்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் முதல் இடம் பிடித்துள்ளார். பூஜா ஹெக்டே 2-வது இடத்தையும், சமந்தா 3-வது இடத்தையும், காஜல் அகர்வால் 4-வது இடத்தையும், மாளவிகா மோகனன் 5-வது இடத்தையும், ராகுல் ப்ரீத்சிங் 6-வது இடத்தையும், சாய் பல்லவி 7-வது இடத்தையும், தமன்னா 8-வது இடத்தையும், அனுஷ்கா 9-வது இடத்தையும், அனுபமா 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
நடிகர்களில் விஜய் முதல் இடத்தையும், பவன் கல்யாண் 2-வது இடத்தையும், மகேஷ் பாபு 3-வது இடத்தையும், சூர்யா 4-வது இடத்தையும், ஜூனியர் என்.டி.ஆர். 5-வது இடத்தையும், அல்லி அர்ஜூன் 6-வது இடத்தையும், ரஜினிகாந்த் 7-வது இடத்தையும், ராம் சரண் 8-வது இடத்தையும், தனுஷ் 9-வது இடத்தையும, அஜித் 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
Follow on social media