இந்தியாவில் புதிய சாதனையை படைத்த யாழ் சிறுமி கில்மிஷா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இந்தியாவில் இதுவரை பல நிகழ்ச்சிகளில் ஈழத் தமிழர் கலந்துகொண்டனர். ஆனால் ஒருமுறைகூட பரிசை வென்றதில்லை அதற்கு பல காரணங்களை கூறினார்கள்.

இருப்பினும், இந்த முறை அதையெல்லாம் உடைத்து பரிசை வென்றிருக்கிறார் யாழ்ப்பாண சிறுமி கில்மிஷா.

இதேவேளை, பரிசு பெற்ற பலர் இன்னமும் திரைப்படத்தில் பாடும் வாய்ப்பின்றி இருக்கின்றனர். ஆனால் பரிசு பெற முன்னரே பாடும் வாய்ப்பு ஈழ தமிழ் சிறுமியான கில்மிஷாவுக்கு கிடைத்துள்ளது.

ஒரு இசையமைப்பாளர் போட்டி முடியும் முன்னரே கில்மிஷாவுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார்.

மேலும், இன்னொரு இசையமைப்பாளர் எப்போது போட்டி முடியும் என காத்துக்கொண்டிருப்பதாக கூறினார்.

இந்தியாவில் இத்தகைய ஒரு பெருமையை ஈழத் தமிழர் ஒருவர் பெறுவது அதிசயம் எனில் அதைவிட அதிசயம் அதை அவர் இத்தனை சிறிய வயதில் சாதித்திருப்பது என கில்மிஷாவை பாராட்டி முகநூலில் தோழன் பாலன் என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply