மனைவியின் நிர்வாண புகைப்படம் – கணவனை மிரட்டிய மர்ம நபர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வாட்ஸ் அப்பில் டிபி ஆக வைத்த தனது மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளத்தில் வெளியிடாமல் இருக்க பணம் தரவேண்டும் என கூறி மிரட்டுவதாக கணவன் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்

வாட்ஸ் அப்பில் டிபி ஆக வைத்த தனது மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளத்தில் வெளியிடாமல் இருக்க பணம் தரவேண்டும் என கூறி மிரட்டுவதாக கணவன் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். பணம் தரா விட்டால் நிர்வாணமாக சித்தரித்து வைத்துள்ள என் மனைவியின் புகைப்படத்தை இணையத்தில் ஆபாசமாக வெளியிட போவதாக மர்ம நபர் தன்னை மிரட்டி வருவதாகவும் கணவன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பங்கள் வளர வளர அது சார்ந்த குற்றங்களும் அதிகரித்து வருகிறது. கைப்பேசி ஸ்மார்ட்போன் என அறிவியல் வளர்ந்துள்ள நிலையில் அதை வைத்து ஏமாற்றி பணம் பறிப்பது, பெண்களின் புகைப்படங்களை திருடி ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளத்தில் வெளியிடுவது போன்ற வன்முறைகள் நடந்து வருகிறது. இப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் சென்னை அயனாவரத்தில் அரங்கேறியுள்ளது. சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக், ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் அதே பகுதியில் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில் தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை செல்போன் வாட்ஸ் அப்பில் டிபியாக வைத்திருந்த நிலையில், அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவரிடமிருந்து தனது வாட்ஸ்அப் எண்ணிற்கு என் மனைவியின் புகைப்படத்தை நிர்வாணமாக சித்தரித்து அவர் ஒரு ஆணுடன் இருப்பது போன்று மார்பிங் செய்து தனக்கு வந்ததாகவும், அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தான் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியபோது, அப்போது மறுமுனையில் பேசிய நபர் உன் மனைவியின் புகைப்படத்தை வைத்து விதவிதமாக ஆபாசமாக சித்தரித்த புகைப்படங்கள் உள்ளது. இப்புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாமல் இருக்க, உரிய பணம் தரவேண்டும். பணம் தர மறுத்தால் புகைப்படங்கள் இணைய தளத்தில் பதிவேற்றி விடுவோம் என மிரட்டினார்.

இதனால் நானும் எனது மனைவியும் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். என் மனைவியை ஆபாசமாக சித்தரித்து மார்பிங் செய்து பணம் கேட்டு மிரட்டும் நபரை கண்டறிந்து அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சைபர் கிரைம் போலீசார் சைபர் குற்றவாளிகள் பணத்தை பறிக்க பல வழிகளில் திட்டம் தீட்டி பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர். எனவே பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து காவல்துறைக்கு புகார் அளிக்க வேண்டும், என்றும் புகார் தெரிவிக்க ஒருபோதும் தயங்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting