பஸ் மீது மரம் விழுந்து மாணவர்கள் ஐவர் பலி – மூவர் ஆபத்தான நிலையில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டம் அருகில் பேருந்து மீது மரம் விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் படுகாயமடைந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்தபேருந்து மீது கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சந்திக்கு அருகில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் பேருந்தில் பயணித்த மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்த நிலையில் மேலும் மூவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

20 பேர் காயமடைந்த நிலையில் அவர்களில் 15 பேர் பாடசாலை மாணவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

விபத்து காரணமாக பேருந்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் பொலிஸாரும் விமானப்படையினரும் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று (06) காலை 6 மணியளவில் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting