அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை (07) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
க.பொ.த உயர்தரப் பரீட்சை காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இதன்படி, நாளை முதல் பாடசாலைகளை நடத்தும் போது மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாணவர்களை தொகுதிகளாக அழைப்பதற்கான தீர்மானம் அதிபர்களிடமே விடப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
வகுப்பறையில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தால், அவர்களை மூன்று குழுக்களாக பிரித்து வகுப்புகள் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
Follow on social media