ஜனவரி 14 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு ராஜ யோகமாம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

ஜோதிடத்தில், கிரகங்களின் உதயம் மற்றும் அஸ்தமனத்திற்கு என சிறப்பு முக்கியத்துவம் உண்டு. அந்தவகையில் நிதி வசதி, செல்வம் மற்றும் ஆடம்பர வாழ்க்கை ஆகியவற்றின் காரணியான சுக்கிரன் ஜனவரி 4 ஆம் திகதி அமைந்திருக்கிறார்.

இந்த நேரத்தில் சுக்கிரன் தனுசு ராசியில் பின் தங்கிய நிலையில் இருக்கிறார். சுக்கிரன் ஜனவரி 14 காலை 5:29 மணிக்கு உதயமாகிறார். சுக்கிரனின் உதயத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் இருக்கும். அந்தவகையில் கீழ்வரும் இந்த 4 ராசிக்காரர்களுக்கு இது சாதகமான பல பலன்களைத் தரும் என ஜோதிடங்கள் கூறுகின்றன. அந்தவகையில்,

மிதுனம் :

ஜனவரி 14-ம் ஆம் தேதி சுக்கிரனின் உதயத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் நல்ல செயல்பாடு நல்ல பலன்களை தரும். சம்பள உயர்வு பற்றிய நல்ல செய்தியும் கிடைக்கும்.

சுக்கிரனின் உதயம் வியாபாரம் செய்பவர்களுக்கு சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரித்து பெரிய ஒப்பந்தங்களைப் பெறலாம்.

கன்னி :

சுக்கிரனின் உதயத்தால் கன்னி ராசிக்காரர்களின் வாழ்வு அமோகமாக இருக்கும். வேலையில் செயல்திறன் சிறப்பாக இருக்கும். இதனால் சம்பளம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதிகாரிகளின் ஆதரவையும் பெறுவீர்கள்.

வியாபாரிகள் கடன் சுமையிலிருந்து விடுபடுவார்கள். இந்த நேரத்தில் இந்த ராசிக்காரர்களால் எதிர்காலத்திற்கான தொகையை சேமிக்க முடியும். இது தவிர, தினசரி வருமானமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு சுக்கிரனின் உதயம் சாதகமாக அமையும்.

சிம்மம்:

சுக்கிரன் உச்சம் பெற்றவுடன் புதிய வேலைக்கான வரம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கும் வேலை மாற விரும்புபவர்களுக்கும் நல்ல செய்தி கிடைக்கும். இட மாற்றத்திற்காக காத்திருக்கும் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

சொந்த தொழில் செய்பவர்களுக்கு சுக்கிரனின் உதயம் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் உண்டாகும்.

கும்பம்:

இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் உதயம் சுபமாக இருக்கும். உத்தியோகத்தில் சிறப்பான வெற்றி கிடைக்கும். இதனுடன், வியாபாரத்தில் நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கும் சுக்கிரனின் உதயம் மிகவும் சாதகமாக இருக்கும்.

நல்ல வேலைக்கான அழைப்பு வரலாம். மொத்தத்தில், சுக்கிரனின் உதயம் கும்ப ராசியினருக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply