யாழ்ப்பாணம் – நீர்வேலிப் பகுதியில் நேற்று (24) இடம்பெற்ற விபத்தில் வயோதிப பெண்ணொருவர் பலியானர்.
நீர்வேலி, இராசவீதி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் பொங்கல் நிகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேலை எதிரே நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தின் மீது டிப்பர் வாகனம் மோதியது.
குறித்த வாகனம் மூதாட்டியை மோதி தள்ளியதில் ஆலயத்தில் இருந்த மூதாட்டி சம்பவ இடத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நீர்வேலி மேற்கைச் சேர்ந்த தனபாலசிங்கம் மகேஸ்வரி ஐந்து பிள்ளைகளின் தாயான (72 வயது) என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
Follow on social media