ஒரு கிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபாவாக இருந்த விசேட பண்ட வரி நேற்று (27) முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை ஒரு ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பெரிய வெங்காயத்தின் (இளஞ்சிவப்பு வெங்காயம்) இறக்குமதிக்கான வரி 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை கிலோ கிராம் ஒன்றுக்கு 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
Follow on social media