அனைத்து தமிழ் கட்சிகளின் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் இளங் கலைஞர் மண்டபத்தில் இன்று மாலை இடம்பெற்றது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தொடர்பிலேயே 10 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இன்று மாலை கலந்துரையாடலில் ஈடுபட்டன.
குறித்த கலந்துரையாடலில் சிவில் சமூக அமைப்புகள், காணாமலாக்கப்பட்டோர் அமைப்புகள், தமிழ் அரசியல் கட்சிகள் என்பன பங்குபற்றியிருந்தன. அத்துடன் அரசியல் ஆய்வாளர்கள் புத்திஜீவிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலின் பின்னர் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுவான குழு ஒன்றினை அமைத்து அதனூடாக செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி சிறிகாந்தா தெரிவித்தார்.
Follow on social media