அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் பணிக்கு வரமுடியாமல் போன அரசு ஊழியர்களுக்கு விசேட விடுமுறை அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, புத்தளம், குருநாகல், பொலன்னறுவை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச அதிகாரிகளுக்கு இந்த விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.

அந்த மாவட்டங்களில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் வீதித் தடைகள் காரணமாக அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து பணியிடத்திற்குச் செல்லும் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் தடைபட்டதால் பணிக்கு சமூகமளிக்க முடியாது பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சிறப்பு விடுமுறை உரிமை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் அரச சேவை ஓய்வூதியர்களுக்கு 3,000 ரூபா விசேட கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்றைய தினம் (24) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் இது தொடர்பான யோசனைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, சம்பள முரண்பாடு தீர்க்கப்படும் வரை ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply