யாழ்.தெல்லிப்பழை பொலிஸாருக்கு எதிராக போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவகர்கள் பொலிஸாருக்கு எதிராக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.

இப் போராட்டம் குறித்து தெரியவருவதாவது, ஜே/239 பிரிவு கட்டுவன் மேற்கு கிராம சேவகர் அலுவலகம் சில தினங்களுக்கு முன்னர் தீயிட்டு எரிக்கப்பட்டது.

இது குறித்து தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை தெல்லிப்பழை பொலிஸார் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “சமாதான அலுவலர், சமாதான நீதிவானுக்கே இந்த நிலையா?,

இன்று எங்களுக்கு நாளை உங்களுக்கு, எங்கள் சேவைக்கு பாதுகாப்பு இல்லையா?, அலுவலகத்தை சேதமாக்கியோரை கைது செய்,

தீ வைத்தது உங்கள் கை வெந்தது உங்கள் சொத்து” என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply