யாழ்ப்பாணம் காங்கேசன்துறை – தமிழகம் நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் வதந்தி காரணமாக 2 மணி நேரம் தாமதமாகவே புதன்கிழமை (18) புறப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கப்பல் புறப்பட தயாரான போது , கப்பலில் 2 கிலோ கிராம் தங்கம் கடத்தப்படுவதாக கடற்படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதனை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த கடற்படையினர் மற்றும் சுங்க பிரிவினர் , பயணிகளை கப்பலில் இருந்து இறக்கி கடுமையான சோதனைகளை முன்னெடுத்தனர். அத்துடன் கப்பலிலும் சோதனைகளை மேற்கொண்டனர்.
சந்தேகத்திற்கு இடமான முறையில் எந்த பொருட்களோ , தங்கமோ கிடைக்காத நிலையில் கப்பலில் மீண்டும் பயணிகளை ஏற்றி பயணத்தை தொடர அனுமதித்தனர்.
இந்த சோதனை நடவடிக்கையினால் கப்பல் சுமார் 2 மணி நேர தாமதத்தின் பின்னரே புறப்பட்டு சென்றுள்ளது.
அதேவேளை, வெள்ளிக்கிழமை (20) முதல் கப்பல் சேவை நிறுத்தப்பட்டு , 2024 ஆண்டு ஜனவரி மாதம் முதலே மீண்டும் சேவையை ஆரம்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Follow on social media