பிரபல அம்மன் ஆலயத்தில் காட்சி தந்த சிவப்பு நாகம் – பக்தர்கள் பரவசம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் சீரணி நாகபூஷணி அம்பாள் தீர்த்தமாடும் தீர்த்தக்கேணியில் நேற்று முன்தினம் தினம்(21) சிவப்பு நிறத்திலான நாகம் ஒன்று கேணியில் தீர்த்தமாடியபடி காட்சி தந்தது.

இந்நிலையில் கேணியில் தீர்த்தமாடிய சிவப்பு நாகத்தை அடியவர்கள் பலர் கண்டு பரவசமடைந்தனர்.

12 வருடங்களுக்கு மேலாக நீதிமன்ற வழக்கு நடைபெற்று அண்மையில் தர்மகர்த்தா சபையிடம் கோவிலின் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் காத்திரமான தீர்ப்பினை வழங்கியுள்ளது.

இந்த நிலையில் நாகபூஷணி அம்பாள் தங்களுக்கு காட்சி தந்து நான் உங்களோடு தான் இருக்கிறேன் என்று கூறியிருப்பதாக அப்பகுதி மக்கள் மெய்சிலிர்த்து கூறுகின்றனர்.

அதேசமயம் குறித்த நாகம் செந்நிறத்தில் காணப்பட்டதாக அடியவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOW

Leave a Reply