வசூலில் சாதனை படைத்த புஷ்பா

புஷ்பா திரைப்படம் வெளியான முதல் இரண்டு நாட்களில் உலகம் முழுக்க ரூ116 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

சுகுமார் இயக்கத்தில் தெலுங்கு ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜுன் – ராஷ்மிகா மந்தான் நடிப்பில் , தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், வெளியான படம் புஷ்பா. செம்மர கடத்தலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று இந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் வெளியானாலும் அனைத்து மாநிலங்களிலுமே ஹவுஸ்ஃபுல் காட்சிகளாய் ஓடிக்கொண்டிருக்கிறதாம். மேலும் புஷ்பா வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுக்க ரூ.47 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தெலங்கானாவில் மட்டுமே ரூ.11 கோடி ரூபாய்க்கு மேலும், தமிழகத்தில் ரூ. 4 கோடி ரூபாய்யும் வசூல் செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புஷ்பா திரைப்படம் உலளவில் வசூல் வாரிக் குவித்து வருகிறது. இத்திரைப்படம் வெளியான முதல் 2 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.116 கோடி வசூல் குவித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் Mythri Movie Makers தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply