2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், அது தொடர்பாக நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையை பிற்போடுமாறு கோரியே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பரீட்சையை 20 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கோரப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை 2022 ஆம் ஆண்டு மாசி மாதம் 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இதற்கு முன்னர் இரண்டு முறை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Follow on social media