இலங்கையில் முட்டை ஒன்றின் உற்பத்திச் செலவு 30 ரூபாவாக இருந்தாலும், உள்ளூர் முட்டை ஒன்றின் விலை சந்தையில் 60 ரூபாவாக உயர்ந்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
முட்டை உற்பத்தியாளர்களும் வியாபாரிகளும் அநியாயமாக மக்களைச் சுரண்டுவதைத் தடுக்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதனால் அதிகபட்ச சில்லறை விலை, அடுத்த வாரம் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
Follow on social media