யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விஸ்த்தரிப்பு பணிகளுக்காக காணி சுவீகரித்தல் சட்டத்தின் கீழ் 261,7365 ஹெக்டேயர் விஸ்தீரனமுடைய காணிகளுக்கான 2 ஆம் பிரிவின் கீழான அறிவித்தல் ஆனது 25.11.1986 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு
அதற்குரிய 5 ஆம் பிரிவின் கீழான வர்த்தமானி 8.6.1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு அமைவாக அந்த காணிகளின் உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இதற்கு கடந்த மாதம் காணி சுவீகரிப்புக்குரியர்களின் பெயர் பட்டியல் வெளியாகி இதனை உறுதிப்படுத்தி அனுப்பியவர்களுக்கு தற்போது இந்த கடிதத்துடன் விண்ணப்பபடிவம் அனுப்பப்பட்டுள்ளது.
இதில் தங்களது காணிக்குரிய நஷ்டஈட்டினை கோருகின்றீர்களா இல்லையா என படிவத்தினை பூரணப்படுத்தி அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
Follow on social media