ஆக்ஞா தியான பயிற்சியை தினமும் செய்து வந்தால் நிச்சயமாக நமது மூளையின் திறன் மேம்படும். நாம் நமது மூளை திறனால் அளவிடற்கரிய சாதனைகளை உலகில் நிகழ்த்தலாம்.
விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கை சின் முத்திரையில் வைக்கவும். பெருவிரலால் ஆள்காட்டிவிரல் நுனியை தொடவும். இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். ஐந்து முறைகள் செய்யவும். பின் உங்களது மனதை நெற்றிப் புருவ மையத்தில் கூர்ந்து தியானிக்கவும். நல்ல பிராண சக்தி அந்தப் பகுதி முழுவதும் கிடைப்பதாக எண்ணவும். ஐந்து நிமிடங்கள் நெற்றிப் புருவ மையத்தில் நிதானமாக தியானிக்கவும். பின் சாதாரண நிலைக்கு வரவும்.
மேற்குறிப்பிட்ட பயிற்சியை தினமும் பயிலுங்கள். நிச்சயமாக நமது மூளையின் திறன் மேம்படும். நற்சிந்தனை பிறக்கும். நாம் நமது மூளை திறனால் அளவிடற்கரிய சாதனைகளை உலகில் நிகழ்த்தலாம். புது புது கண்டுபிடுப்புகளை சமுதாயத்திற்கு பயனளிக்கும் வகையில் உருவாக்கலாம். உங்கள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு பள்ளிப் பருவத்திலேயே கற்றுக்கொடுங்கள். வளர்ந்து வரும் பொழுது சிறந்த அறிஞர்களாக அவர்கள் நினைத்த துறையில் சாதனை புரிந்து வெற்றியாளர்களாக விஞ்ஞானிகளாக உருவாகுவது உறுதி.
Follow on social media