தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் இளையராஜா இசையமைத்து வருகிறார்.
இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் இளையராஜா இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு உடல்நலக்குறைவால் இளையராஜா மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கிடையே தான் நலமுடன் இருப்பதாக இளையராஜாவே டுவிட்டரில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். 33 விநாடிகள் ஓடும் வீடியோவில் காரில் பயணிக்கும் இளையராஜா, தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோவால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Follow on social mediaWish you all happy new year 2022.#HappyNewYear2022 pic.twitter.com/cSlW4BKQGa
— Ilaiyaraaja (@ilaiyaraaja) December 31, 2021