பல் துலக்காமல் முத்தமிடுவது தொடர்பான சர்ச்சையில், தனது இளம் மனைவியை குத்திக் கொன்ற கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கேரளா, பாலக்காட்டில் இந்த சம்பவம் நடந்தது.
கோவையை சேர்ந்த தீபிகா (28) என்பவரே உயிரிழந்தார்.
தீபிகா, அவினாஷ் தம்பதிக்கு ஒன்றரை வயதில் மகன் உள்ளான். நேற்று செவ்வாய்க்கிழம காலையில் மகனை, அவினாஷ் முத்தமிட்டுள்ளார். பல் துலக்காமல் மகனை முத்தமிட வேண்டாமென தீபிகா கண்டித்ததால், தம்பதியரிடையே மோதல் ஏற்பட்டது.
காலை 9.30 மணியளவில் அவர்களின் ஒரே மகன் ஐவின் கண்முன்னே இந்த கொலை நடந்துள்ளது. தீபிகா வீட்டில் இரத்த வெள்ளத்தில் கிடந்ததை அக்கம் பக்கத்தினர் கண்டுபிடித்தனர். அவளது மகன் ஐவின் அவளைக் கட்டிப்பிடித்து அழுதுகொண்டிருந்தான்.
தீபிகாவின் அருகில் அவினாஷ் கத்தியை வைத்துக்கொண்டு நிற்பதையும் அப்பகுதி மக்கள் பார்த்தனர்.
தீபிகாவை உடனடியாக பெரிந்தல்மன்னாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் அவரை காப்பாற்ற முடியவில்லை. தீபிகாவின் கழுத்து, கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவினாஷை அப்பகுதியினர் பிடித்து கடுமையாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.
கோவையை சேர்ந்தவர் தீபிகா. பல ஆண்டுகளாக பெங்களூருவில் வசித்து வந்த தம்பதி, இரண்டு மாதங்களுக்கு முன் பாலக்காடுக்கு குடிபெயர்ந்தனர்.
அவினாஷ் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
Follow on social media