நைஜீரியாவில் 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்தமையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வெள்ளத்தால் 4 லட்சத்து 40 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 14 லட்சம் பேர் தங்களது இருப்பிடத்தை விட்டு வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து படகுகள் மூலம் மக்கள் வெளியேறி வருகின்றனர்.
ஒன்றரை லட்சம் பேர் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், வெள்ளத்திற்கு இதுவரை 600 பேர் உயிரிழந்துள்ளனர்.
Follow on social media