நிறைபோதையில் மனைவியின் தந்தை மற்றும் அயல் வீட்டு சிறுவனை மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்த குடிமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் கல்கமுவ என்ற இடத்தில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் 67 வயதான முதியவரும், 16 வயது சிறுவனும் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மெலும் தொியருவதாவது, காலை முதல் மது அருந்திவிட்டு வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்திய நிலையில்,
மாலையில் மனைவியின் தந்தை மற்றும் அயல் வீட்டில் வசித்த உறவு முறை சிறுவனொருவனுடனும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரால் மண்வெட்டியால் தாக்கப்பட்ட மனைவியின் தந்தையான 67 வயதான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
16 வயது உறவு முறை சிறுவன் பலத்த காயமடைந்த நிலையில் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய 42 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Follow on social media