கிளைமோர் குண்டு தயாரித்த முன்னாள் புலி உறுப்பினர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கிளைமோர் குண்டுகளை தயாரித்து வந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் உட்பட இரண்டு பேர் கிளிநொச்சி, நாச்சிக்குடா பிரதேசத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் தயாரித்தது வைத்திருந்த 13 கிளைமோர் குண்டுகள், கிளைமோர் குண்டுக்கான கவர், 18 குண்டு பாகங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்று விடுதலையானவர் எனவும் பின்னர் முல்லைத்தீவு சிவில் பாதுகாப்பு படையினருடன் இணைந்து கடமையாற்றியவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மன்னார் வேளாங்குளம் பிரதேசத்தை சேர்ந்த இந்த நபர், கிளிநொச்சி நாச்சிக்குடாவில் உள்ள நண்பருடன் இணைந்து இந்த குண்டுகளை தயாரித்து வந்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சந்தேக நபர்கள் நடத்தி வந்த படகு பழுதுபார்க்கும் இடத்தை சோதனையிட்ட போதே கிளைமோர் குண்டுகள் கைப்பற்றுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள புலிகளின் முன்னாள் உறுப்பினர் கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மற்றைய நபர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply