விஜய் பட இயக்குனர் திடீர் மரணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

விஜய் நடித்து வெற்றிப்பெற்ற ஷாஜகான் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மாரடைப்பால் மரணம் அடைந்திருக்கிறார்.

ஷாஜகான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இயக்குனராக அறியப்பட்ட இயக்குனர் ஆச்சார்யா ரவி மாரடைப்பால் காலமானார். ’சேது’ திரைபடத்தில் இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ரவி, பிறகு விக்னேஷ் நடிப்பில் வெளியான ‘ஆச்சார்யா’ படத்தை இயக்கினார்.

இத்திரைப்படத்தின் மூலம் ஆச்சார்யா ரவி என்று அறியப்பட்டார். இவர் ‘டம்மி பட்டாசு’, ‘அனைத்துக்கும் ஆசைப்படு’ போன்ற படங்களை இயக்கியுள்ளார். கடந்த 2001 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான ஷாஜகான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் இயக்குனர் ஆச்சார்யா ரவி சிகிச்சை பலனின்றி இன்று (28.12.2021) காலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply