சியம்பலாவ பிரதேச்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்ட பாடசாலை மாணவிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
எச்.எம்.செஹானி செவ்வந்தி என்ற 15 வயதுடைய மாணவி தனது காதலனுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலில் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 29ஆம் திகதி கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
அவரது மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதென சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
அவர் கல்வி கற்ற பாடசாலையில் மேலும் சில மாணவிகள் கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த மாணவியின் பெற்றோர் மற்றும் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் 31 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒன்லைன் கற்கை நெரிக்காக கொள்வனவு செய்யப்பட்ட கையடக்க தொலைபேசியில் இளைஞனுடன் காதல் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, அதன் மூலம் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
Follow on social media