கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த இரு பேருந்துகள் மீது இனந்தெரியாதோரால் நேற்று (28.11.2023 ) இரவு தாக்குல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனுராதபுரம் நொச்சியாகம பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட புத்தளம் – கொழும்பு வீதியில் கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த தனியார் மற்றும் அரச பேருந்துகள் மீது மோட்டார் வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கிலிருந்து கொழும்பில் நடைபெற்ற சிக்கனக் கடன் கூட்டுறவுச் சங்கங்களின் தேசிய மாநாட்டில் பங்குபற்றிவிட்டு திரும்பிய வவுனியாவை சேர்ந்த இரு தனியார் பேருந்துகளில் ஒரு பேருந்தும் , யாழ் நோக்கி பயணித்த இலங்கை அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஒரு பேருந்துமே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Follow on social media