பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து கடந்த 4ஆம் தேதி திரைக்கு வந்த திரைப்படம் “லவ் டுடே”.
இப்படத்தில் கதாநாயகியாக இவானா நடித்திருந்தார்.
மேலும் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரவீனா உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருந்தனர்.
கலகலப்பான கதைக்களத்தில் அமைத்திருந்த இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி அடைந்துள்ளது.
இளைஞர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் இப்படத்தை கொண்டாடுகிறார்கள். அதன் பலனாக நாளுக்கு நாள் லவ் டுடே படத்தின் வசூல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், தமிழகத்தில் மட்டுமே கடந்த மூன்று நாட்களில் ரூ. 15 கோடி வரை வசூல் செய்துள்ளது. பல முன்னணி நட்சத்திரங்களுக்கே கிடைக்காத வரவேற்பு அறிமுக நடிகரான பிரதீப் ரங்கநாதனுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow on social media